-----------------------------------------------------Cont.....d/From Blog 15/1.
ஆறாம் பத்து =>
உன்அருள்வாள் கொண்டுவீயக் கூட்டு.
நம்பரத்த வோ?தக்கோய் கூறு.
மான்தோல் புரிநூல் அணிதிரு மார்பினன்!
------------------------------------------------------------------------------
ஏழாம் பத்து =>
தந்தைகால் தாளவிழ வந்தனாய் மாடுநின்று
-----------------------------------------------------------------------------------------
எட்டாம் பத்து =>
தலைமகனிடத்து ஈடுபட்ட தலைமகளது செயல் கண்ட தாய் வியந்து கூறிய பாசுரம் :
சிலைதண்டு திண்படை ஆழிபோல் சங்கும்
நிலைகொண்ட தாமிவர்க்கு என்று -- அலவலம்
பெண்ணிவள் கண்ண புரத்து அம்மானைக்
கண்டாள் கொலோ? தக்கோ ரே !
தலைவியின் நிலை கண்ட தாய் தலைமனின் இயல்பைப்பழித்தும், தலைமகளது இளமைக்கு இரங்கியும் கூறிய பாசுரம் :
தலைமகனைப் பிரிந்த தலைவி அறத்தொடு நின்றமைக்கு இரங்கிக் கூறிய பாசுரம் :
கரைஎடுத்த வெண்சங்கு நின்கை கிடப்ப
தலைமகனிடத்து ஈடுபட்ட தலைவி ஆற்றாது தும்பியை நோக்கிக் கூறிய பாசுரம் :
தலைவனைப் பிரிந்த தலைவி அந்திப் பொழுதில் தலைவன் வாராது தாழ்த்த, தென்றல் முதலியவற்றால் வருந்தியமைக் கூறல் :
வியமுடை நாகத் தரிதுயில் ஆழ்ந்தான்!
ஒன்பதாம் பத்து =>
வங்கமா முன்நீர் தடத்ததாயின் ஊறா
தலைவனது உருவவெளிப்பாடு கண்ட தலைவி தோழிக்குக் கூறிய பாசுரம் :
தலைவனிப் பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிய பாசுரம் :
பிரிவாற்றாத் தலைவி பறவைகளை தூது விட்ட பாசுரம் :
செய்தனவை ஓம்பினனே! முன்.
தலைவி தனது தலைமகன் உள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி
உற்றாரை வேன்டும் பாசுரம் :
அக்கும் புலித்தோல் அரைகிசைந்து மங்கையாள்
பிரிவாற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கிக் கூறிய பாசுரம் :
மூவரில் மூத்தவன்! தேவரில் நாயகன்!
பத்தாம் பத்து =>
பல திவ்யதேசங்கள் :
இரக்கம் அறியா இராவணன்,தம் அன்னைப்
ஏத்துகின்றோம் ராமா! எமைக்காக்க வேணுமென்று!
கண்ணனை முலை உண்ண அழைத்தல் :
சந்தமலர்க் கோதை அசோதை நானுனை
கண்ணனை கைகொட்டி விளையாடும்படி கூறுதல் :
பூங்கோவல் பள்ளப் பொதுக்கோது வாய்பிளந்தாய்!
மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கிருழ்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்த :
கண்ணன் செய்தமைக் குறித்து ஆய்ச்சியர் முறை இடுதல் :
மான முடையஎன் கன்னியை என்செய்கேன்?
ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடுதல் :
பதினோறாம் பத்து =>
பிரிவாற்றாத தலைவி இரங்கிக் கூறும் பாசுரம்:
பிரளய காலத்தில் எம்பெருமான் உலகத்தாரை ரக்ஷித்த படி :
எம்பெருமான் திறத்தில் ஈடுபடாத அவயவங்கள் பயனற்றன என்று கூறுதல் :
நீளாகம் திண்தோள் சுடர்முடி மாயோனைப்
மாற்றம் உரைப்பதொன்று உண்டு, கதியிலன்பால்
உபோத்காதம் :
குலம்தரும்! கோதிலவா பக்திநெறி கூட்டி
செலுவதிரு நாரணன் தாள்சேர் -- நலம்தரும்!
தோலாப் புகழ்தொண்டர் பொற்றாள் துணையுதும்
மேலாத் தரும்கலியன் பாட்டு !
அர்ச்சாவதாரத்தில் மண்டிக் கிடந்த ஆழ்வாருக்கு அபிநந்தனம் :
With
due apologies to Elders and the Prabanda Gayakas, I give herewith the second and concluding half of the 108 Periya Thirumozhi Paasurms in the form of one
Paasuram for each Decads, the same commencing and ending with similar
Syllables as that of Alwar's Thirumozhi Pathigam. This work no doubt is
an overact by an under-dog calling for the sympathy of the Lord with
empathy. Let me not elaborate further the usefulness of this work but
leave it to the viewers considered judgement and appraisal.
The 1st half was published in my previous Block-15/1 and has to be read with this for a full and concise rendering of the same.
Please forgive me for any of the errors that may have crept in unintended out of exuberance and poetic frenzy and perhaps due to rhythmic compulsions or otherwise of their meaning, purport or grammar.
With obeisance,
கி.ஸ்ரீ.ஸ்ரீ.
---------------------------------------------------------------------------------------------------------------------
With obeisance,
கி.ஸ்ரீ.ஸ்ரீ.
---------------------------------------------------------------------------------------------------------------------
ஆறாம் பத்து =>
நாலு கவிப்பெருமாள் ஆறு பனுவல்சேர்ந்
ஆலு மறைப்பொருள் ஐந்ததும் -- மாலே!
அறம்பொருள் இன்பப் பயன்வீடு பேறு !
பெறும்அவன் தொண்டர் மடுத்து.
வண்டுண்ணு தேன்மலர்த் தார்புரள வானவர்க்காய்
அண்ணல்செய் தாங்கமுதம் நீடலும், நின் -- கண்வரு
பெண்ணமுது கொண்டவனே ! விண்ணகராய்! வேண்டேனிம்
மண்வாழ்க்கை நின்பால் மருவு!
பெண்ணமுது கொண்டவனே ! விண்ணகராய்! வேண்டேனிம்
மண்வாழ்க்கை நின்பால் மருவு!
பொறுப்பாய்! வெகுளாது ஐபுலன்கட் ஆளாய்
மறந்து மனைமக்கள் என்று -- இருந்தேனாய்
இன்றறிந்தேன் நின்னடைந்தேன் விண்ணகர் மேயவனே! உன்அருள்வாள் கொண்டுவீயக் கூட்டு.
துறப்பேனும் அல்லேன் மதிமுகத்து நல்லார்
மறப்பேனும் அல்லேன், இனிப்போய் -- பிறப்பிறப்பு
வெல்வேனும் அல்லேன்! திருவிண் நகராய்சொல்!
அல்லல் நில்லா வகை.
கண்ணினார் கொய்வலை வீழ இருந்தேற்கு
நுண்ணிடையார் வாசல் அடைத்து, என் -- எண்ணினீர்
ஏகும் எனஇகழா முன்னம் தொழவேக
மேகும் நறையூரா ரே!
கலங்க நூற்றுவர் துற்றிவிறல் வீரர்
மலங்க விசயற்காய் தேர்துறந்து -- கோலங்கை
ஆழிகொடுஆழி மறைத்தான் அணிதுளப
வெழில்நறை யூர்த்திரு மாலே!
அம்பரமும் ஆழ்கடல் ஏழ்உல கேழவையும்
செம்பரத்த தோர்திசைகள் எட்டும்உன் -- பொன்வயிற்றில்
எம்பரத்த தோ?சொல்! நறையூர் மணிமாடம்
ஆளாய் பணிசெய் அணிநீர்ச் சடையோன்தான்
நாளும் குறைஇரப்ப பிச்சையூண் -- மீள
அகல்மார்வ வாசநீர் உகந்தளிப்பான்! நம்பீ!
புகலென வானவர்க்காம் வாழ்வு!மான்தோல் புரிநூல் அணிதிரு மார்பினன்!
தேன்துழாய் மாலைஆள் தோளினன்! -- காண்டுமென
காட்டும் நறையூர்க்கே ! அக்கலியன் வாய்ப்பனுவல்
கூட்டும்புத் தேளிர்க்கப் பால்!காட்டும் நறையூர்க்கே ! அக்கலியன் வாய்ப்பனுவல்
பெடையோடு அன்னம் நடைபயிலும் பொன்னித்
தடமுடைச் சோலைத் திருநறையூர் -- மாடக்
கொடிமிக மின்னி நுமைஅழைப்ப நம்பி!
அடியே முடிபடநும் வாழ்வு!
கிடந்தான் இடந்தான் நடந்தான் அடைந்தேற்
கிடம்மணிமுத் தாற்று நறையூர் -- நெடுமாலே!
நாவில் நமோநா ராயணா என்றோவ
மேவா துயர்பாவம் வீய்ந்து !------------------------------------------------------------------------------
ஏழாம் பத்து =>
கறவா மடநாகு தன்கன்று உள்ளும்
உறவதுபோல் உம்மை நறையூர்க் -- கிறைவா!
மறவாமை நீஅருளல் வேண்டும்! இனியாம்
பிறத்தல்போல் இல்லை துயர்.
புள்ஏனம் என்றாய பல்பிறவி மேனியாய்!
சினவில் செருகளத்து வாளரக்கர் வீழ்த்த
தொண்டீர் ! எதிர்சூழ நின்று.
உள்ளேன்என் உள்ளத்தின் உள்ளேநீ -- மெள்ளப்
புகுந்ததற்பின் போகலொட்டேன்! நம்பீ! நறையூர்
உகந்ததற்பின் வாழும் அயல்?சினவில் செருகளத்து வாளரக்கர் வீழ்த்த
தனிவில் ஒருவன்! தமியன் -- மனம்கொண்ட
மைந்தன் ! நறையூர்க்காய் என்னை அருள்நினைந்து
உய்ந்தமை நில்லுமே நீர்!
கண்சோர நீரசும்பி மால்காதல் மெய்புலர்த்த
தண்சேறை எம்பருமான் தாள்சேர்ந்தார் -- கண்ணாரக்
கண்டுருகி கையாரத் நாம்தொழுது ஏத்துவாம் தொண்டீர் ! எதிர்சூழ நின்று.
தந்தைகால் தாளவிழ வந்தனாய் மாடுநின்று
எந்தன் மனத்தே எழுந்தருளி -- அங்கம்
மெலிவெய்த மீண்டானூர் அம்ம! அழுந்தூர்
வலியநில் லாஎன் மனம்.
சிங்கமாய்ச் சீரிச் சிவந்து அவுணனாவி
மங்க அழல்வைத் தவன், மகற்கு -- அங்கமலக்
கண்ணாய் இருக்கும் , திருவழுந்தூர் கோசகன்நம்
எண்ணம் முழுதாளு வான்!
திருவுக்கும் செல்வமோங்கு செல்வா! காந்தள்
கருமுகைப் போல்மைய கண்ணா! -- உருவுநல்லாய்!
ஐவர்என் மேவிக் குமைப்ப அழுந்தூர்மேல்
செய்வதிசைந் தாய்என் மகிழ்ந்து?
செங்கமல நாண்மலர்மேல் வண்டினங்கள் வந்துமோத
செங்கழனிச் சேலுகளும் செல்வச்சீர் -- ஓங்கு
அணியழுந்தூர் நின்ற அமரர்கோன் ஏற்றிப்
பணியவல்லீர் உம்பராவர் தாம்.
பெரும்புறத்த தோர்கடலை! பத்தர்தம் ஆவிக்
கொருத்தனை ! நித்திலத் தொத்தினை! -- தாருகளும்
கண்ணமங்கை கண்ணனை! வேட்கையால் சொன்னபாடல்
திண்ணமவன் கற்பவையே தான்?கொருத்தனை ! நித்திலத் தொத்தினை! -- தாருகளும்
கண்ணமங்கை கண்ணனை! வேட்கையால் சொன்னபாடல்
-----------------------------------------------------------------------------------------
எட்டாம் பத்து =>
தலைமகனிடத்து ஈடுபட்ட தலைமகளது செயல் கண்ட தாய் வியந்து கூறிய பாசுரம் :
சிலைதண்டு திண்படை ஆழிபோல் சங்கும்
நிலைகொண்ட தாமிவர்க்கு என்று -- அலவலம்
பெண்ணிவள் கண்ண புரத்து அம்மானைக்
கண்டாள் கொலோ? தக்கோ ரே !
தலைவியின் நிலை கண்ட தாய் தலைமனின் இயல்பைப்பழித்தும், தலைமகளது இளமைக்கு இரங்கியும் கூறிய பாசுரம் :
தெள்ளியீர்! தொண்டுதாம் நின்னடிக்கு என்றுதான்
உள்ளினாள் ! ஊணுறக்கம் காண்கிலாள்! -- கொள்கிடாது
எள்கினீர் ஏணிலீர்? எம்மான் இளமைக்கு
ஒள்குவீ ர் இஃதுஅடுமோ நீடு!தலைமகனைப் பிரிந்த தலைவி அறத்தொடு நின்றமைக்கு இரங்கிக் கூறிய பாசுரம் :
கரைஎடுத்த வெண்சங்கு நின்கை கிடப்ப
முறையாமோ எம்மிரு கைசங்கும் -- நேரா
திழந்தேற்கு கண்ண புரத்துறையும் அம்ம !
வழக்கிது,எம் பால்நண்ணா வே!தலைமகனிடத்து ஈடுபட்ட தலைவி ஆற்றாது தும்பியை நோக்கிக் கூறிய பாசுரம் :
விண்ணவர் தம்பெருமான்! வேத முதல்வன்!எம்
கண்ணரவர்! கண்ணபுரம் ஒன்றுடையார் -- என்னுமிவள்
எண்ணம் பிழையாமே வண்ண நறுந்துழாய்
கொண்டுஊ தாய்கோல்தும் பீ!தலைவனைப் பிரிந்த தலைவி அந்திப் பொழுதில் தலைவன் வாராது தாழ்த்த, தென்றல் முதலியவற்றால் வருந்தியமைக் கூறல் :
தந்தைதாய் காலில் விலங்கற தோன்றியவன் வாரானால்
வந்துஎமை வாதைசெய் மாருதமே! -- அந்தியில்எம்
சிந்தைநோய் ஆகுலம்தான் தெரிவையள் நின்புலம்ப
முந்தி அவர்கூடத் தோன்று. சிந்தைநோய் ஆகுலம்தான் தெரிவையள் நின்புலம்ப
தொண்டீர்!நம் மேல்வினைகள் வாரா! நெடுமாட
கண்ண புரத்து அடிகள்பால் -- எண்ணம்
அகலாது நாம்தொழ தெய்வத் திருமா
மகளால் அருள்நடத்த வாழ்ந்து.வியமுடை நாகத் தரிதுயில் ஆழ்ந்தான்!
படமுடை நாகம் நடம்பயிலத் -- தூயநீர்த்
தடமுடை அக்கடம்பின் கண்இடர்ந்தா னுக்கிடம்
யாமுடைக் கணபுரமாம் இல்.
வானோர் மலங்க நெடுவெள்ளம் கொண்டகாலம்
ஏனமாய்ப் பார்மடந்தை நேர்துயர் -- தானே
எயிற்றிடந்து தீர்த்தான் கணபுரம் சேர்ந்து
பயிற்றும் பௌவம்பொய்யா வே!
கைமா இடர்தீர்த்த கண்ணறா ! கண்ணபுரம்
மொய்மா மனத்துடை நின்னடியேன் -- உய்மோ
இனிஒரு வர்க்கு? பிறவாமைக் கூட்டே!
இனிமறு தலைப்பதில்லா நாடு.
வண்டார்பூஞ் சோலைப்புறவின் மங்கையார் மன்னன்சொல்
கண்ணபுரத் ஐய!கேள்! மற்றுமோர் -- கொண்டாடுத்
தெய்வம் உளதாய் இருப்பாரை ஒத்திலேம்உன்
மெய்த்தொண்டர்க் காகல் அறிவு.
------------------------------ ------------------------------ ------------------------------------------
ஒன்பதாம் பத்து =>
வங்கமா முன்நீர் தடத்ததாயின் ஊறா
தெங்கும் கிணறு! திருக்கண்ணன் - அம்குடியுள்
காயா மகிழம்! உறங்காப் புளி!வழக்கும்
தேரா வறுமை இலை!தலைவனது உருவவெளிப்பாடு கண்ட தலைவி தோழிக்குக் கூறிய பாசுரம் :
பொன்னிவர் மேனி ! பெரிதும் இளையர்! என்
மென்நெஞ்சம் நின்று அகலாதார்! -- என்தோழி!
அச்சோ! அழகியார் நாகை எழிலார்க்கு
எச்சப் படாதோ மகிழ்வு ?அச்சோ! அழகியார் நாகை எழிலார்க்கு
தலைவனிப் பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிய பாசுரம் :
தன்னை அளித்தேற்கு பேதை நினைப்பிரியேன்
என்றெழிலாப் பேசி மறந்தார் -- நன்று
அதுதாரான் ஆகிலும் நாம்தொழுதும் தோழி!
எதுக்கவன் வாரானோ வைகு ?அதுதாரான் ஆகிலும் நாம்தொழுதும் தோழி!
பிரிவாற்றாத் தலைவி பறவைகளை தூது விட்ட பாசுரம் :
காவார்மேல் மாலாகி பொன்பயந்தேன்! புள்ளினங்காள்!
மேவார் அவர்க்குஎன் சிந்தைநோய் -- ஓவுமினே!
மெய்போலும் பொய்வல்லார் எம்பெருமான் புல்லாணி செய்தனவை ஓம்பினனே! முன்.
தலைவி தனது தலைமகன் உள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி
உற்றாரை வேன்டும் பாசுரம் :
தவள நெடும்தடம்தோள் மார்வர்க்கு என்றன்
ஆவி அளவும் அணைஆம்பல் -- பூங்கையர்
ஏவலம் காட்டிங்கு எய்திடாமுன் உய்த்திடுமின்
ஆவல் குறுங்குடிக்கே ஏய்ந்து.அக்கும் புலித்தோல் அரைகிசைந்து மங்கையாள்
பக்கம் ஒலிந்த சிவனாரும் -- மிக்கப்
பரவும் குறுங்குடிக்கு தூய்நீர் விரைபூ
விரவித் தொழப்பாவம் போம்.
தந்தைதாய் சுற்றம் இவைமுற்றும் வல்லவாழ்
மைந்தனார் என்றெண்ணிச் சொல்லுவார் -- பந்தமே
பேணுவாய்! அன்னைவாய் கிள்ளையாய் போந்தல்
நாணுவாய்! இன்பமது எய்து.
முந்துற ஆக்கை அதுநீங்கி நின்ஏத்த
தந்துதவல் வேண்டுமே உன்அருள்! -- அந்தணர்
மந்திரத் தாலிறைஞ்சும் மாலிருஞ் சோலையுள்
சுந்திரனார் நெஞ்சே வணங்கு!மந்திரத் தாலிறைஞ்சும் மாலிருஞ் சோலையுள்
பிரிவாற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கிக் கூறிய பாசுரம் :
மூவரில் மூத்தவன்! தேவரில் நாயகன்!
பூவையர் ஆவியைகோ வித்துச் -- சுவைப்பவன்!
கோலிய தன்வரம் கூடுமோ எம்பெண்?
மாலிருஞ் சோலை பயின்று !
எங்கள் தனிமுதல்! எம்வாணாள்! தேநுந்து
தொங்கல் தவழ்முடியான்! விண்ணவர் -- தங்கள்கோன்
மாட்டுயர் ஈசர்க்கு தன்னுடம்பில் கூறுகொள்
கோட்டியூர் எம்பிரான்எம் வான்!
-----------------------------------------------------------------------------------------------------
கோட்டியூர் எம்பிரான்எம் வான்!
-----------------------------------------------------------------------------------------------------
பத்தாம் பத்து =>
பல திவ்யதேசங்கள் :
ஒருநல் மணியை!பொன் முத்தினைத் தேனை!
பெறநல் அமுதை! அருளை! -- இரும்நாள்நாம்
காண்பது வேங்கடம் வெஃகாபோல் வெள்ளறை
தண்காவில் ஒண்மாலாட் சி!
இராமனிடத்தில் தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டிக் கூத்தாடுதல் :
இராமனிடத்தில் தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டிக் கூத்தாடுதல் :
இரக்கம் அறியா இராவணன்,தம் அன்னைப்
புரத்திட்டு தாழ்பட்டான்! எங்களால் -- நேரும்
பிழையுண்டோ? வல்வில் இராமா!ஓ! அஞ்சினோம்!
ஏழைக் கிளகாய்!எம் கோ!
இராமனிடத்தில் தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டிக் கூத்தாடுதல் :
இராமனிடத்தில் தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டிக் கூத்தாடுதல் :
ஏத்துகின்றோம் ராமா! எமைக்காக்க வேணுமென்று!
சீற்றமெம்மேல் தீரவே சேவகம் -- ஆற்றவந்தோம்!
கூடிநின் றாடி குழமணி தூரத்தைப்
பாடிமன் றாடுகின்றோம் நன்று.கண்ணனை முலை உண்ண அழைத்தல் :
சந்தமலர்க் கோதை அசோதை நானுனை
வந்துசேமம் அம்மமுண்ணக் கூவினேன்! -- அந்தியம்
போதுவானின் தெய்வங்கள் காணவங்கு நில்லாதே
சாதுவனாய் போந்தாரா மே!போதுவானின் தெய்வங்கள் காணவங்கு நில்லாதே
கண்ணனை கைகொட்டி விளையாடும்படி கூறுதல் :
பூங்கோவல் பள்ளப் பொதுக்கோது வாய்பிளந்தாய்!
தூங்குறி வெண்ணை அளைகையாய் ! -- ஓங்கி
இருகையால் கொட்டாய்நீ சப்பாணி! அப்பம்
தருவே!கொட் டாய்சப்பா ணி!மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கிருழ்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்த :
எங்கானும் ஈதொப்ப துண்டே? அளப்பிலா
எங்கோ இமயத்து உச்சியில் -- கங்கைக்
கரைமேல் மந்திரம் கற்றானோ வெண்ணை
முறையால் ஆப்புண்ணும் எய்து?கண்ணன் செய்தமைக் குறித்து ஆய்ச்சியர் முறை இடுதல் :
மான முடையஎன் கன்னியை என்செய்கேன்?
யானே? அவள்விளை யாடுமிடம் -- தானே
குறுகி துகில்பற்றிக் கீறி படிறன்
படிறுசெய தாழ்வதிலே னே !ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடுதல் :
காதில் கடிப்பும் ஒருசெண்டும் கைக்கிசைந்து
தலைவியின் ஆற்றாமைகுத் தாய் இரங்கித் தலைவனை வேண்டும் பாசுரம் :
போதிற் கமலம் மிகநாறி -- ஏதுக்கிது
எல்லியம் போதென்னிது ? என்றாய்சி சாடலும்
சொல்லியம்ப துக்கம் செலவு.தலைவியின் ஆற்றாமைகுத் தாய் இரங்கித் தலைவனை வேண்டும் பாசுரம் :
புள்ளுவம் பேசிஎம் பெண்ணைஉன் கைவட்டாம்
தலைமகனைப் பிரிந்த தலைமகள் ஆற்றாது கூறிய பாசுரம் :
உள்ளல் நலமோ? மணிநிறம் -- மெள்ளக்
கொணர்ந்து இவள்முன்னே வந்துபோகாய் மாதோ?
அணங்கிவள்சீர் மேவும் மிகுத்து.தலைமகனைப் பிரிந்த தலைமகள் ஆற்றாது கூறிய பாசுரம் :
திருத்தாய் செம் போத்தே! கருமா முகில்போல்
ஒருத்தன் வரகாணல் அஃதும் -- கரையாய்
ஒருத்தன் வரகாணல் அஃதும் -- கரையாய்
காக்கைப் அம்பிள்ளாய்! பொன்னார் அடிகளை
நோக்கில் அறிகிலமாய்ப் பாடு.
---------------------------------------------------------------------------------
பதினோறாம் பத்து =>
பிரிவாற்றாத தலைவி இரங்கிக் கூறும் பாசுரம்:
குன்றம் எடுத்தானும் கோயின்மை செய்துபுக்கு
இன்னும்ஏன் வாரானோ? தண்மதி -- என்னைத்
தபிக்கலும் காமனார் ஐங்கணைக்கு மாயும்என்
ஆவிக்கோர் ஈறும் இல.
தலைவி பிரிவற்றாது வருந்திக் கூறும் பாசுரம்:
குன்றம் எடுத்தமால்என் நெஞ்சம் நிறைகொண்டு
தலைவி பிரிவற்றாது வருந்திக் கூறும் பாசுரம்:
குன்றம் எடுத்தமால்என் நெஞ்சம் நிறைகொண்டு
சென்றானாய், தூமலர் நீர்கொடு -- நன்றாக
நாம்தொழுதும் ஏத்தினால் காணக் கொலோதான்?
காமனார் தாதை உலகு.
தலைவி அறத்தொடு நிற்று இரங்கிக் கூறும் பாசுரம் :
தலைவி அறத்தொடு நிற்று இரங்கிக் கூறும் பாசுரம் :
மன்னிய மாலுக்கே என்எழில் தோற்றேனே !
என்னிவர்என் றெண்ணாதே பற்றினளாய் -- என்மனத்தை
வைத்தோமே ! கூடல் குறிப்பதாகில் நெஞ்சே!மால்
கைத்தா மரைக்குய் யுலகு!
அவதாரங்களின் மகிமை :
அவதாரங்களின் மகிமை :
நிலையில் உலகிதில் மீன்ஆமை கேழல்
வலியுடை ஓர்அரி குறள்என்றும் -- மேலை
சிலைகோல் இவையுடை ராம கிருட்டினனாய்
சிலைகோல் இவையுடை ராம கிருட்டினனாய்
ஞாலத்தே உம்பர் உலவு.
இரண்டு தோழியர் எம்பெருமானது சௌலப்யம், பரத்வம் இவை சொல்லி ஏத்துதல் :
இரண்டு தோழியர் எம்பெருமானது சௌலப்யம், பரத்வம் இவை சொல்லி ஏத்துதல் :
மானமரு மென்னோக்கி இன்துணையா காடுறைந்தான்
வானமரும் தேவனவன் காணேடீ! -- வானிலமர்
நாதனவன் வெள்ளத்தான் வேங்கடத்தான் உள்ளத்துப்
போதமர்வான் சாழலே கொண்டு.பிரளய காலத்தில் எம்பெருமான் உலகத்தாரை ரக்ஷித்த படி :
மைபோல் இருள்மிக்கு பாரெல்லாம் மூழ்கலா
வெய்து நெடுங்கடலே ஆனகாலம் -- ஐயன்
வெய்து நெடுங்கடலே ஆனகாலம் -- ஐயன்
வானவரும் யாமும் அகப்பட திருவயிற்றில்
போனகம் செய்தளிப்பர் தாம்!
எம்பெருமான் திறத்தில் ஈடுபடாத அவயவங்கள் பயனற்றன என்று கூறுதல் :
நீளாகம் திண்தோள் சுடர்முடி மாயோனைப்
பேணாப் புலன்,புலனல்ல -- கண்டாமே !
மெய்நின்ற பாவம் முடிய மறவாது
செய்தவம்,மால் பாடியாடு வாம்!
தேக சம்பந்தத்தை போக்கித்தற எம்பெருமானிடத்தில் ஆழ்வார்
பிரார்த்த்திதல் :
மாற்றம் உரைப்பதொன்று உண்டு, கதியிலன்பால்
சீற்றமெழ இன்னம் பிறந்தனாய் -- ஆற்றுமோ?
ஆழியாய்! நீஅருளாய் உன்அருளே! எங்கானும்
ஊழ்வினை சாரா வகை!ஆழியாய்! நீஅருளாய் உன்அருளே! எங்கானும்
உபோத்காதம் :
குலம்தரும்! கோதிலவா பக்திநெறி கூட்டி
செலுவதிரு நாரணன் தாள்சேர் -- நலம்தரும்!
தோலாப் புகழ்தொண்டர் பொற்றாள் துணையுதும்
மேலாத் தரும்கலியன் பாட்டு !
அர்ச்சாவதாரத்தில் மண்டிக் கிடந்த ஆழ்வாருக்கு அபிநந்தனம் :
காரார் புயற்கைக் கலிகன்றி! வாரிமாறா
கார்மன்னு நீள்வயல் மங்கையார்! -- கூர்கொள்
வடிவு நெடுவேல் வலவன்! இடவகை
நாடல் நமக்கு அழகு!
திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆசாரியன் திருவடிகளே சரணம்.
தாசரதி தாஸன் ,
கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாஸ தாஸன் அவர்கள்
***மயர்வற மதிநலம் அருளப் பெற்ற திருமங்கை ஆழ்வார்
சாதித்த பெரிய திருமொழி 108 பதிகங்களின் ***
சுருக்கமாக இயற்றின
'பெரிய திருமொழி பாசுர-திரட்டு''
முற்றுப் பெற்றது.
***சுபம்***
திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆசாரியன் திருவடிகளே சரணம்.
தாசரதி தாஸன் ,
கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாஸ தாஸன் அவர்கள்
***மயர்வற மதிநலம் அருளப் பெற்ற திருமங்கை ஆழ்வார்
சாதித்த பெரிய திருமொழி 108 பதிகங்களின் ***
சுருக்கமாக இயற்றின
'பெரிய திருமொழி பாசுர-திரட்டு''
முற்றுப் பெற்றது.
***சுபம்***